வாயில் கருப்பு துணி கட்டி வந்த வார்டு உறுப்பினர்கள்


வாயில் கருப்பு துணி கட்டி வந்த வார்டு உறுப்பினர்கள்
x
தினத்தந்தி 4 Oct 2023 1:15 AM IST (Updated: 4 Oct 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வாயில் கருப்பு துணி வார்டு உறுப்பினர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்களான செல்வ மகாமுனி, சரண்யா, இளங்கோவன், முனிராஜ், பரந்தாமன், நாகஜோதி ஆகியோர் வந்தனர். அவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினா். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story