38 வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்


38 வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்
x

38 வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்

திருப்பூர்

வீரபாண்டி

பேரறிஞ்ர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வார்டு குழு மற்றும் பகுதி சாபா கூட்டம், 4ம் மண்டலம் 38 வார்டு எஸ்.ஆர். நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.4 வது மண்டல உதவி ஆணையாளர் வினோத், உதவி ஆணையாளர் (பொறுப்பு) செல்வநாயகம், 38 வார்டு கவுன்சிலர் மணிமேகலை முருகசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் 38வது வார்டு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தெரிவிக்கையில்;-

வார்டுகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் தற்பொழுது அதிகரித்து வருவதால் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்திஜி முதல் வீதி தெரு விளக்கு பற்றாக்குறை உள்ளது. வார்டுகளில் நாய் தொல்லை அதிகரித்துள்ளது. எஸ்.ஆர் நகர் பகுதியில் சாலையோரம் வாகனம் நிருத்தி எடையூரை ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிரிகரித்துள்ளது. இப்பகுதியில் இரவு காவலர்கள் தேவை.

மழைநீர் வடிகால் வசதி கூடுதல் தேவை. போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்., புதிய வீடுகளுக்கு வரி அதிகமாக உள்ளது.வரி செலுத்துவது குறித்து தெளிவான விளக்கம் தேவை. கடந்த 2 வருங்களாக செயல்படுத்தப்பாடாமல் இருந்த குடிநீர், தார்சாலை, தெருவிலக்கு, மழைநீர் வடிகால் வசதிகள் தற்போது தீர்க்கப்பட்டு உள்ளது. வார்டு கவுன்சிலர் நன்றி. வார்டுகளில் புதியதாக குடியேரும் நபர்களில் விபரங்களை சேகரிக்க வேண்டும். 38 வார்டு கவுன்சிலர் மக்களில் குறைகள் என்ற வாட்ஸ் அப் குரூப் மூலமாக மக்களில் குறைகளை உடனுக்குடன் தீர்வு காணப்படுவது வரவேற்கத்தக்கது.இவ்வாறு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் தெரிவிக்கையில் 38 வார்டுகளில் 83 தார்சாலை கள் உள்ளது. தற்போது 25 சாலைகள் பணிகள் முடிந்துள்ளது. மேலும் 35 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 5 கோடி மதிப்பில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.



Related Tags :
Next Story