பூசாரிநாயக்கன் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


பூசாரிநாயக்கன் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
x

ூசாரிநாயக்கன் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருப்பூர்

தளி

பூசாரிநாயக்கன் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பூசாரிநாயக்கன் ஏரி

உடுமலை அடுத்த ஆலம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் பூசாரிநாயக்கன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து மானுப்பட்டி கால்வாய் மூலமாக பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் 10- க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர்இருப்பு உயர்வதுடன் 88.56 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தளி வாய்க்கால் மூலம் பாசனம் பெருகின்ற ஏழு குளங்களுடன் இந்த ஏரியையும் சேர்த்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி முதல் பூசாரி நாயக்கன் ஏரிக்கு நீர் இருப்பு ஏற்றவாறு இரண்டு சுற்றுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையிலும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் நிலத்தடி நீர்இருப்பு பாதிப்பு அடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதுடன் சாகுபடி பணிகளும் பாதிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து குறிச்சிக் கோட்டை கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் கூறியதாவது:-

தண்ணீர் வழங்க வேண்டும்

கடந்த 10 ஆண்டுகளாக முறையான அரசாணை பெற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு தனிநபர் ஒருவரின் சுயலாபத்தினால் தண்ணீர் திறப்பது தாமதமாகி உள்ளது. இதனால் பூசாரிநாயக்கன் ஏரியை ஆதாரமாகக் கொண்ட பகுதியில் கடும் வறட்சி நிலவுவதுடன் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரிக்கு அரசு உத்தரவுப்படி தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற எஸ்.கே.மெய்ஞானமூர்த்தியிடம் பூசாரிநாயக்கன் ஏரி பாசனத்திற்கு தண்ணீர் பெற்று தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் அவர் முதல்-அமைச்சர் உட்பட துறை சார்ந்த அமைச்சர் மற்றும் கலெக்டருக்கு மனு அளித்து உள்ளார். அதில் அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆணையின் அடிப்படையில் மானுப்பட்டி வாய்க்கால் மூலம் பூசாரிநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

---------

2 காலம்

பூசாரிநாயக்கன் குளம் நீர் இருப்பு இல்லாமல் வறண்டு உள்ளதை காணலாம்.

1 More update

Next Story