ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று பள்ளிபாளையம் திரும்பிய கல்லூரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று  பள்ளிபாளையம் திரும்பிய கல்லூரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு
x

ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று பள்ளிபாளையம் திரும்பிய கல்லூரி மாணவிக்கு உற்சாக வரவேற்பு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச வலுதூக்கும் சம்மேளனம், ஆசிய வலுதூக்கும் சம்மேளனம் சார்பில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிய அளவிலான வலுதுக்கும் போட்டி நடந்தது. சப்- ஜூனியர், ஜூனியர், மாஸ்டர் போன்ற பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா, வங்காளதேசம், நேபாளம், குவைத், ஓமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டியில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த ஹரிணிப்பிரியா சப்-ஜூனியர் 57 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் இவர் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

சாதனை படைத்த ஹரிணி பிரியா நேற்று பள்ளிபாளையம் வந்தார். அப்போது வழியில் ஆவாரங்காடு பகுதி பொதுமக்கள் சார்பில் ஹரிணி பிரியாவுக்கு ஆரத்தி எடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பள்ளிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆவாரங்காட்டில் உள்ள அவருடைய வீடு வரை ஊர்வலமாக சென்றனர்.

Next Story