டெங்கு தடுப்பை கடைபிடிக்காததொழில் நிறுவனங்களுக்கு அபராதம்கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை


டெங்கு தடுப்பை கடைபிடிக்காததொழில் நிறுவனங்களுக்கு அபராதம்கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
x

டெங்கு தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.

சேலம்

சேலம்

டெங்கு தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்தார்.

கலெக்டர் ஆய்வு

சேலம் நெத்திமேடு இட்டேரி தெருவில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது, மாநகர் நல அலுவலர் யோகானந்த் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

பருவமழை பெய்து வருவதையொட்டி, மாவட்ட நிர்வாகத்தால் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகிறது. அதன்படி வீட்டினுள் மூடப்படாமல் நீண்ட நாட்களாக சேகரித்து வைக்கும் தண்ணீர் பாத்திரங்கள், தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. அதே போன்று சுற்றுப்புறத்தில் கிடக்கும் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றில் தேங்கும் மழைநீரில் இருந்தும் டெங்கு கொசுக்கள் அதிகம் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.

டெங்கு தடுப்பு பணி

மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி பகுதியில் 500 பணியாளர்களும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 650 பணியாளர்களும் என மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிக்கு 1,150 கொசு ஒழிப்பு பணியாளர்கள் அமைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று லார்வாப் புழுக்களை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

டெங்கு தடுப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பொது சுகாதார சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பத்தம்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். டெங்கு பாதிப்பு வருமுன் காக்கும் வகையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story