சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி நகராட்சியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதிகளிலும், நகராட்சி எல்லை பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் மாடுகளை அவிழ்த்து விட கூடாது. நகரில் பல பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து வளர்ப்பவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் தெருக்களில் மாடுகளை சுற்றித்திரிய விட கூடாது என்று பல முறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் மாடுகள் கையகப்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story