வீட்டில் இருந்ேத ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்


வீட்டில் இருந்ேத  ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் பெறலாம்
x

வீட்டில் இருந்தே ஓய்வூதியராரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் பெறும் வசதி உள்ளதாக தேனி மாவட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார்

தேனி

தேனி மாவட்ட தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வூதியதாரர்கள் வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சமர்ப்பிக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக வயதானவர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் தபால் அலுவலகங்களில் ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரர்களிடம் ஆதார், செல்போன் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு எண் விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். எனவே இந்த வசதியை ஓய்வூதியதாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story