பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடங்கினர்


பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடங்கினர்
x

ஓ.இ.மில்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட குடோன்கள் மூடப்பட்டன.

திருப்பூர்


ஓ.இ.மில்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாட்கள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட குடோன்கள் மூடப்பட்டன.

பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரம்

திருப்பூரில் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் 85-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் பனியன் கட்டிங் வேஸ்ட் துணியில் இருந்து நிறம் வாரியாக சிறு, சிறு துணியாக பிரித்து அதை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

ஓ.இ.மில்களுக்கு முக்கிய மூலப்பொருட்களை வழங்குபவர்களாக உள்ளனர். திருப்பூர் டூம்லைட் மைதானம், நெசவாளர் காலனி, மங்கலம் பகுதியில் இருந்து பனியன் கட்டிங் வேஸ்ட் பிரிக்கப்பட்ட துணிகளை பெற்று 100-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக ஓ.இ.மில்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களின் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று முதல் நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். நேற்று காலை முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது.

இதன்காரணமாக திருப்பூரில் 100-க்கும் மேற்பட்ட பனியன் கட்டிங் வேஸ்ட் குடோன்கள் மூடப்பட்டன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் லியாகத் அலி கூறும்போது, 'இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.1½ கோடி முதல் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடோன்கள் மூடப்பட்டுள்ளன' என்றார்.


Related Tags :
Next Story