வீரப்பநாயக்கன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகள் :நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


வீரப்பநாயக்கன்குளத்தில் கொட்டப்படும் கழிவுகள் :நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் வீரப்பநாயக்கன்குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. மேலும் 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பில் ஒரு போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீரை கம்பம் பகுதியில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் விவசாயிகள் தேக்கி வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வீரப்பநாயக்கன் குளத்தில் கம்பம் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் சங்கமிக்கிறது. இதன் மூலம் இப்பகுதியில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வீரப்பநாயக்கன்குளம், கண்மாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளம் மண் மேவி காணப்படுகிறது. இதற்கிடையே தற்போது குளத்தில் கட்டிட கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகளால் குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் குப்பைகளால் தண்ணீர் தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story