ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளைமாசுகட்டுப்பாட்டு வாரியமே அகற்ற கோரிக்கை


ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளைமாசுகட்டுப்பாட்டு வாரியமே அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளை மாசுகட்டுப்பாட்டு வாரியமே அகற்ற கலெக்டரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பூ உலகின் நண்பர்கள் இயக்கத்தின் அமைப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் பூ உலகின் நண்பர்கள் இயக்கத்தின் அமைப்பாளர் சுந்தர்ராஜன் கூறும் போது, ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்ற முகமூடியை அணிந்து கொண்டு ஆலை நிர்வாகம் ஆலைக்குள் சென்று பராமரிப்பு செய்ய முயற்சி செய்து வருகிறது. மூடப்பட்ட இந்த ஆலையை பாதுகாக்கும் பொறுப்பு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம்தான் உள்ளது. ஆகையால் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலையில் கழிவுகளை அகற்றும் பொறுப்பும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்குதான் உள்ளது. ஆகையால் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் தலைமையில் தொழில்நுட்ப பொறியாளர்கள் உதவியுடன் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான செலவை ஆலை நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளோம். அதற்கு கலெக்டர் அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார் என்று கூறினார்.


Next Story