வெம்பக்கோட்டை பகுதியில் வீணாகும் குடிநீர்


வெம்பக்கோட்டை பகுதியில் வீணாகும் குடிநீர்
x

வெம்பக்கோட்டை பகுதிகளில் வீணாகும் குடிநீர் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதிகளில் வீணாகும் குடிநீர் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் வினியோகம்

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மானூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து ஆங்காங்கே ஏற்படும் உடைப்பு காரணமாக செவல்பட்டி, குகன்பாறை, அன்னபூரணியாபுரம், துலுக்கன்குறிச்சி, ஜக்கம்மாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

குழாயில் உடைப்பு

இந்தநிலையில் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நீண்ட நாட்களுக்கு பிறகு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டபோது வெம்பக்கோட்டை ஆற்றுப்பாலத்தின் அடியில் உள்ள குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் மேல் நோக்கி பீய்ச்சி அடித்து செல்கிறது.

உடைப்பை சரி செய்யாததால் தொடர்ந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. பாலத்தின் அடியில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வரும் நிலையில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பினால் தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக ஆற்றில் செல்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story