உறைகிணறில் நீர் உறிஞ்சும் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர்
உறைகிணறில் நீர் உறிஞ்சும் குழாய் உடைந்ததால் வீணாகும் குடிநீர்
சாத்தூர்
சாத்தூர் இருக்கன்குடி அணைக்கட்டு பகுதியில் உறை கிணற்றில் நீர் உறிஞ்சும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. நீர் உறிஞ்சும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் சாத்தூர் நகர், வெங்கடாசலபுரம், குறிஞ்சி நகர், கே.கே. நகர், படந்தால், தென்றல் நகர், முத்துராமலிங்க நகர், வைகோ நகர் என பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. சாத்தூர் நகர் பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறையும், மற்ற பகுதிகளுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் கூடுதலாக 2 நாட்கள் தாமதமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே உடைந்த குழாயை சரி செய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.