களர்நில மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி


களர்நில மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல் சாகுபடியில் களர்நில மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சின்னக்குமட்டி கிராமத்தில் நெல் சாகுபடியில் களர் நில மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய கள பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண் விஞ்ஞானிகள் நூர்ஜகான், காயத்ரி, வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு களர் நிலத்திக்கேற்ற புதிய நெல் ரகங்கள், திருச்சி 3, 5 மற்றும் சி.எஸ்.ஆர் 56 ரகங்களை பயிரிடுதல், களர் நில சீர் திருத்த தொழில் நுட்பங்களான எந்திர வழி முறை உப்புகளை சுரண்டுதல், பாசன நீர் சுத்தகரிப்பு, கசிவு தேவை மற்றும் பயிர் பாதிப்பு, விதை நேர்த்தி, நேரடி நெல் விதைப்பு, உயிர் உரங்கள் பயன்பாடு, பயிர் சுழற்சி, கைபேசி நெல் செயலி, தமிழ்நாடு வேளாண்மை இணைய தளம் மற்றும் உழவரின் வளரும் வேளாண்மை மாத இதழ் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப உரை வழங்கினர். தொடர்ந்து களர் நிலங்களில் ஆய்வு மேற்கொண்டு களப்பயிற்சி அளித்தனர். இதில் விவசாயிகள் மற்றும் பரங்கிப்பேட்டை உழவர் உற்பத்தியாளர் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story