2024 மக்களவைத் தேர்தல்ல என்னோட ஆட்டத்தை பாருங்க - சீமான் பரபரப்பு பேட்டி
நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.
சென்னை,
ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ, ஈ.பி.எஸ, அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்தநிலையில்,
புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஈரோடு கிழக்கு தொகுதியில் 30% ஆதிகுடி மக்கள் சிறுபான்மையினர் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும். அரவிந்த் கெஜ்ரிவாலால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா? 2024 மக்களவைத் தேர்தல்ல என்னோட ஆட்டத்தை பாருங்க என்றார்.
Related Tags :
Next Story