முறைகேடாக வழங்கப்பட்ட 15 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது


முறைகேடாக வழங்கப்பட்ட 15 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது
x

திருமுருகன்பூண்டி நகராட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட 15 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரே கட்டிடத்திற்கு 10 இணைப்பு இருந்ததால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூர்


திருமுருகன்பூண்டி நகராட்சியில் முறைகேடாக வழங்கப்பட்ட 15 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரே கட்டிடத்திற்கு 10 இணைப்பு இருந்ததால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருமுருகன்பூண்டி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முன்னதாக பேரூராட்சியாக இருந்த போது ஏராளமான குடிநீர் இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது முறைகேடாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று நகராட்சிக்குட்பட்ட பகுதியில் முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதன்படி 15- வது வார்டுக்கு உட்பட்ட தேவராயம்பாளையம், ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 15 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இதில் அந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய கட்டிடத்திற்கு அதன் உரிமையாளர் 10 குடிநீர் இணைப்புகள் பெற்றிருந்ததும், இதற்காக 8 வரிகள் செலுத்தியதும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் முறைகேடாக குடிநீர் இணைப்புகளை பெற்று தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அவருக்கு சொந்தமான 10 இணைப்புகளில் 5 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. ஒரே நபர் 10 குடிநீர் இணைப்புகள் பெற்றிருந்ததால் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

முன்னுரிமை

நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்கு பணி தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதுவரை குடிநீர் இணைப்பு பெறாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.


Related Tags :
Next Story