நகரில் உள்ள 13 ஊருணிகளை நிரப்ப திட்டம்


நகரில் உள்ள 13 ஊருணிகளை நிரப்ப திட்டம்
x

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்து சேர்ந்துள்ள நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள 13 ஊருணிகளை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்து சேர்ந்துள்ள நிலையில் ராமநாதபுரம் நகரில் உள்ள 13 ஊருணிகளை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

வைகை தண்ணீர்

வைகை அணை வேகமாக நிரம்பி வந்ததால் உபரி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கணக்கில் இருந்து கடந்த 8-ந் தேதி முதல் வரும் 14-ந் தேதி வரை ஆயிரத்து 148 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட பட்டது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்து சேர்ந்துள்ளது. இதன்படி 618 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரிய கண்மாயில் இந்த வைகை தண்ணீர் வரவால் 300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேர்ந்துள்ளது.

குறிப்பாக பெரிய கண்மாயில் சுமார் 14 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் உள்ளது. கண்மாயின் மொத்த கொள்ளளவு 7 அடி என்ற நிலையில் தற்போது 5 அடி அளவினை எட்டி உள்ளது. ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரும் வழியில் வைகை தண்ணீரை களரி கால்வாய், கீழ நாட்டார் கால்வாய், மேல நாட்டார் கால்வாய், கூத்தங்கால் கால்வாய், வலது பிரதான கால்வாய் வழியாக ஏராளமான கண்மாய்களுக்கு தண்ணீர் சேதாரமின்றி பொதுப்பணித் துறையினர் முடிந்தஅளவு கொண்டு சேர்த்துள்ளனர். இதனால் மேற்கண்ட பல கண்மாய்களில் 25 சதவீதத்திற்கு குறையாமல் தண்ணீர் சேர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் பெரிய கண்மாயில் 5 அடி அளவிற்கு தண்ணீர் சேர்ந்துள்ளதால் நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பெரிய கண்மாயில் இருந்து நகரின் 13 ஊருணிகளுக்கு தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்து வருகிறது.

நடவடிக்கை

இதற்கு ஏற்ப ஊருணிகளுக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும் பணிகளில் நகரசபை நிர்வாகம் இறங்கி உள்ளது. பெரிய கண்மாயில் 5 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளதால் சிறிதளவு தண்ணீர் எடுத்து ஊருணிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கு ½ அடி தண்ணீர் மட்டும் தேவைப் படும் என்றும், மழை பெய்துவிடும் என்பதால் பெரிய கண்மாய் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story