மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர்-மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் - ஆதரவாளர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
கோடைக்காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர்-மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என ஆதரவாளர்களுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மக்கள் பணி செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தினை தணிக்கும் வகையில் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கிவிட்ட நிலையில், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் ஆங்காங்கே உடனடியாக தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை அமைத்து, பொதுமக்களின் தாகத்தினை தணித்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story