தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கூட்டம்
உடன்குடி பள்ளியில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி கிறிஸ்டியா நகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லிவிஸ்டன் தலைமை தாங்கினார். சிகரம் இயக்குனர் முருகன், நீர் சேமிப்பு பற்றி பேசினார். எந்ெதந்த வழிமுறைகளில் நீரை சேமிக்கலாம் என பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் கூறி அனைவரும் இணைந்து நீரை சேமிக்க வேண்டும். நீர் எவ்வளவு முக்கியம் எனவும் விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் டேனியல், தாமஸ் கிருபாகரன் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story