குடிநீர்க் கட்டணம் செலுத்தாததால் 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை நகராட்சி ஊழியர்கள் துண்டிப்பு

குடிநீர்க் கட்டணம் செலுத்தாததால் 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை நகராட்சி ஊழியர்கள் துண்டிப்பு
x

காங்கயத்தில் 3 வருடங்களாக குடிநீர்க் கட்டணம் செலுத்தாததால் 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை நகராட்சி ஊழியர்கள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர்

காங்கயத்தில் 3 வருடங்களாக குடிநீர்க் கட்டணம் செலுத்தாததால் 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை நகராட்சி ஊழியர்கள் துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

குடிநீர் இணைப்பு

காங்கயம் நகராட்சியில் 2020-ம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீர்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் நிலுவை தொகைகள் செலுத்தப்படாமல் உள்ளது.

அதன்படி காங்கயம் நகரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர், ஏ.சி.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 5 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியர்கள் நேற்று துண்டிப்பு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த 5 வீடுகளின் மொத்த குடிநீர் கட்டண நிலுவைத் தொகை ரூ.23 ஆயிரத்து 550 ஆகும்.

நடவடிக்ைக தொடரும்

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறும்போது " காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீர்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, குடிநீர்க் குழாய் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளவும். குடிநீர்க் கட்டணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், என்றார்.

Related Tags :
Next Story