2-வது திட்டத்தில் குடிநீர் முறையாக வினியோகிக்க வேண்டும்


2-வது திட்டத்தில் குடிநீர் முறையாக வினியோகிக்க வேண்டும்
x

2-வது திட்டத்தில் குடிநீர் முறையாக வினியோகிக்க வேண்டும்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொங்குபாளையம் கிளை செயலாளர் அப்புசாமி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், 'பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த பரமசிவம்பாளையம், மாரப்பம்பாளையம் புதூர், பள்ளிபாளையம், காளம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய ஊர்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து 2-வது திட்ட குடிநீர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 5,6 மாதமாக குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் குழாய் உடைந்து சேதமாகிவிட்டது. நீரேற்று நிலையங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் வழங்க முடியவில்லை என்கிறார்கள். ஆழ்குழாய் கிணறுகளில் சப்பை தண்ணீர் கிடைக்கிறது. இதனால் கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது திட்டத்தில் வாரத்துக்கு இரண்டு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்' என்று கூறியுள்ளனர்.


Next Story