கழிவுநீர் கலந்ததாக பொதுமக்கள் புகார்; கூடலூரில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்


கழிவுநீர் கலந்ததாக பொதுமக்கள் புகார்; கூடலூரில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
x

கழிவுநீர் கலந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தததை அடுத்து கூடலூரில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

தேனி

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து நீரேற்று நிலையங்கள் மூலம் குழாய்கள் மூலம் 16-வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்தநிலையில் 12-வது வார்டு பகுதிகளான பொம்மச்சி அம்மன் கோவில் வடக்கு தெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் தெரு ஜோத்து கவுடர் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து நகராட்சி பொறியாளர் வரலட்சுமி, அலுவலர்களுடன் அந்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் குழாய் வரும் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு, அதில் கழிவுநீர் கலந்து வருகிறதா என்பது குறித்து பார்வையிட்டனர்.

இருப்பினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 12-வது வார்டு பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டறிந்து, அதனை சீரமைத்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story