வனப்பகுதியில் மழை இல்லாததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
வனப்பகுதியில் மழை இல்லாததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
தளி
வனப்பகுதியில் மழை இல்லாததால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
அமராவதி அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. ஆனாலும் அதிகமான மழைப்பொழிவு இல்லை. குறைந்த அளவு மழை பெய்தது.
மழை குறைவு
இந்த நிலையில் வனப்பகுதியில் மழை நின்று விட்டதால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் குறைந்து வருகிறது. மழை தீவிரமடையாத சூழலில் இருப்பில் உள்ள நீர் இருப்பை கொண்டு சாகுபடி பணிகள் தொடங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் 62.80 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 405 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.