10 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது


10 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது
x

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நேற்று மாலை 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடலூர்

அண்ணாமலைநகர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடலூர் உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து, அதன் வழியாக கடலில் கலக்கிறது.

நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் கரையோரம் உள்ள கிராமங்களான பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

பொதுமக்கள் தஞ்சம்

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் உதவியுடன் கீழக்குண்டலப்பாடி கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் தஞ்சமடைந்தனர். மேலும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிட கரையோர கிராமங்களை கண்காணித்து வருகிறார்கள்.


Next Story