அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது


அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது
x
தினத்தந்தி 15 Jun 2022 8:20 PM IST (Updated: 15 Jun 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது

தென்காசி


குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அருவிகளில் படிப்படியாக தண்ணீர் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக விழுந்தது. சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு சீசன் தொடங்குவது கால தாமதமாகி வருகிறது. இருப்பினும் குற்றாலம் பகுதிகளில் குளிர்ந்த காற்று வேகமாக வீசுவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.


Next Story