குழாய் உடைந்து வெளியேறிய குடிநீர்


குழாய் உடைந்து வெளியேறிய குடிநீர்
x

குழாய் உடைந்து குடிநீர் வெளியேறியது.

புதுக்கோட்டை

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்சியிலிருந்து இனாம் குளத்தூர், கல்குடி, விராலிமலை வழியாக ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் கொடிக்கால்பட்டி பஸ் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து சிறிது தூரத்தில் மற்றொரு இடத்திலும் உள்ள குழாயில் சிறிதளவு உடைப்பு ஏற்பட்டு நீரானது வெளியே சென்று வீணாகியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை சரி செய்யாததால் நேற்று குடிநீர் குழாயில் உடைப்பு அதிக அளவில் ஏற்பட்டு குடிநீரானது அதிக அளவில் வெளியேறி வீணாகி வருகிறது. இதனையடுத்து மீண்டும் இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்ததாரர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் மின்சாரம் நிறுத்தம் என்பதால் மின்சாரம் வந்தவுடன் இன்று இரவிற்குள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதாக தெரிவித்தனர்.


Next Story