குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்


குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்
x

வெம்பக்கோட்டை அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வினியோகம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியிலிருந்து சிவகாசிக்கு செல்லும் மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது துலுக்கன்குறிச்சி, அலமேலுமங்கைபுரம், வனமூர்த்தி லிங்கபுரம் ஆகிய பகுதிகளில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாக செல்கிறது. கடும் வெயில் காரணமாக கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கு குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

வீணாகும் குடிநீர்

இந்தநிலையில் துலுக்கன்குறிச்சியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் மெயின்ரோட்டில் இ.மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த சில நாட்களாக தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனை சரி செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் யாருக்கும் பயன்பாடு இல்லாமல் தண்ணீர் வீணாகி வருகிறது. ஆகையால் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story