தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு


தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
x

வேலைநிறுத்தப் போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வரும் 30-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்வெல் அனுமதிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் கொடுக்கப்பட்ட அனுமதி முடிவடைந்துள்ளதால் புதிய அனுமதி கோரி தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story