பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரிய கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு


பெத்தநாயக்கன்பாளையம் அருகே   கரிய கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
x

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கரிய கோவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட கருமந்துறை கரிய கோவில் அணை நீர் தேக்கம் 52 அடி உயரம் கொண்டது. இந்த அணை நிரம்பியதால் வசிஷ்ட நதி நீர்ப்பாசனத்திற்காக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா பூஜை செய்து பாசன தேவைக்காக தண்ணீரை திறந்து வைத்தனர்.

இந்த அணையில் இருந்து ஜூலை 3-ந் தேதி வரை 23 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை விவசாயிகள், பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறு உதவி கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story