அ.குன்னத்தூர் ஊராட்சியில் குடிநீர் குழாய், மின் கேபிள் அமைக்க பூமிபூஜை


அ.குன்னத்தூர் ஊராட்சியில் குடிநீர் குழாய், மின் கேபிள் அமைக்க பூமிபூஜை
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

அ.குன்னத்தூர் ஊராட்சி கு.அய்யம்பாளையம் ராஜா வாய்க்கால் அருகே பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் மற்றும் மின் கேபிள் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தனர். இதில் ஆவின் சேர்மன் ராஜேந்திரன், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் தீபா, சாந்தி ராமலிங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story