குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு


குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
x
தினத்தந்தி 31 Aug 2023 4:15 AM IST (Updated: 31 Aug 2023 4:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள குடிநீர் குழாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள குடிநீர் குழாயில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.


குழாய் சீரமைப்பு பணி


பொள்ளாச்சி நகராட்சி மக்களுக்கு அம்பராம்பாளையம் ஆழியாறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் குடிநீர் எடுத்து, அங்கேயே சுத்திகரித்து ராட்சத குழாய்கள் மூலம் மார்க்கெட் ரோட்டில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மார்க்கெட் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது.


இதை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் நேற்று குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதையொட்டி 2 நாட்கள் நகரில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகள் காரணமாக நகரில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-


3 இடங்களில் உடைப்பு


அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து 10.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறது. இதில் 9.3 மில்லியன் லிட்டர் தண்ணீர் நகராட்சிக்கு வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு தினமும் 103 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மார்க்கெட் ரோட்டில் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது.


அதன்பிறகு தான் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக பணிகளை முடிப்பதில் தாமதம் ஆனது. விடிய, விடிய பணிகளை மேற்கொண்டு நாளை (இன்று) காலைக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். அதன்பிறகு பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


நடவடிக்கை


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மார்க்கெட் ரோட்டில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் மட்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.



Next Story