குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு


குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையத்தில் இருந்து 295 வழியோர கிராமங்களுக்கான குடிநீர் திட்டத்தில் அனுப்பர்பாளையம் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு வரப்படும் குடிநீர், அங்கிருந்து கோமங்கலம், கோலார்பட்டி, ஏ.நாகூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் உடுமலை ரோடு தொழிற்பேட்டை பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது. இதை சீரமைக்க கோரி தாசில்தார், சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று குடிநீர் குழாய் சீரமைப்பு பணியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி உடைப்பு சீரமைக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டம் நன்றி அறிவிப்பு கூட்டமாக நடத்தப்படும் என்று குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


Next Story