தினத்தந்தி செய்தி எதிரொலி: குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது


தினத்தந்தி செய்தி எதிரொலி: குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது
x
தினத்தந்தி 27 Aug 2023 12:30 AM IST (Updated: 27 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் எம்.சவேரியார்புரம் அருகே உள்ள கீதாநகர் விலக்கு பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 2 வாரமாக குடிதண்ணீர் அதிக அளவு சாலையில் வீணாகி வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி குழாய் உடைப்பை சரிசெய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவிய 'தினத்தந்தி'க்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story