பள்ளிபாளையம் அருகே கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பீரிட்டு பாய்ந்த தண்ணீர்


பள்ளிபாளையம் அருகே   கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பீரிட்டு பாய்ந்த தண்ணீர்
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:47 PM GMT)

பள்ளிபாளையம் அருகே கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பீரிட்டு பாய்ந்த தண்ணீர்

நாமக்கல்

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் கவுண்டம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் திருச்செங்கோட்டுக்கு கூட்டுக்குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சோதனை ஓட்டமாக நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அப்போது வெப்படை அருகே எலந்தகுட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு அமைக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் குழாயில் இணைப்பு சரியாக இல்லை என தெரிகிறது. இதனால் குழாய் உடைந்து அதில் இருந்து தண்ணீர் பீரிட்டு வெளியேறி சாலையில் வீணானது. சுமார் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீரிட்டு எழுந்ததால் அந்த பகுதியில் நீர்வீழ்ச்சி தோன்றியது போல காட்சியளித்தது.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் மற்றும் நடந்து சென்றவர்கள் அவதியடைந்தனர். அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக நீரேற்று நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


Next Story