குடிநீர் குழாய் சீரமைப்பு


குடிநீர் குழாய் சீரமைப்பு
x

வெம்பக்கோட்டை அருகே குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அணையில் இருந்து சிவகாசிக்கு செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக வெம்பக்கோட்டை துணை மின் நிலையம் அருகிலும், வனமூர்த்திலிங்காபுரம் பஸ் நிறுத்தம், விஜய கரிசல்குளம் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகிலும் ஆங்காங்கே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று கொண்டு இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதன் எதிெராலியாக சிவகாசி மாநகராட்சியில் இருந்து அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.



Next Story