அங்கலகுறிச்சியில் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்-குழாய்களை மாற்றி அமைக்க வலியுறுத்தல்


அங்கலகுறிச்சியில் குடிநீர் தட்டுப்பாடு:  பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்-குழாய்களை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
x

குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இரும்பு குழாய்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் இரும்பு குழாய்களாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பொதுமக்கள் சாலை மறியல்

ஆனைமலை ஒன்றியம் அங்கலகுறிச்சி ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பகுதிகளுக்கு ஆழியாறில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கலகுறிச்சியில் இருந்து ஆழியாறு செல்லும் ரோட்டில் இருபுறமும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை.

மேலும் குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி கொடுப்பதில்லை. இதனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் நா.மூ.சுங்கத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆழியாறு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காமல் இங்கிருந்து செல்வதில்லை என்றனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையில் பொதுமக்கள் நா.மூ.சுங்கத்தில் இருந்து வால்பாறை செல்லும் ரோடு, உடுமலை, தென்சங்கம்பாளையம், பொள்ளாச்சிக்கு சாலைகளின் நாலாபுறமும் அமர்ந்து வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார், ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை, ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்கு அடிக்கடி குழாய்களை உடைப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் குழாயை சீரமைக்க சென்றால் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வாங்க வேண்டும் என்கின்றனர். மேலும் குழாய் மீது சாலை அமைப்பதால் வாகனங்கள் செல்லும் போது மீண்டும் உடைவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக உடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து பாதிப்பு

இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து கொடுக்கப்படும். மீண்டும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகத்துக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக வால்பாறை ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story