காவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறைசீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்


காவிரி ஆற்றில்          தண்ணீர் பற்றாக்குறைசீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறல்
x

காவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.

ஈரோடு

காவிரி ஆற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன.

குடிநீர் வினியோகம்

காவிரி ஆற்றில் இருந்து ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. காவிரி டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் குடிநீர் தேவைக்கு மட்டும் அணையில் இருந்து 1,000 கனஅடி முதல் 1,500 கனஅடி வரை திறக்கப்பட்டு வருகின்றன.

இந்த தண்ணீரை வைத்துக்கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் சாக்கடை கழிவுநீர் காவிரியில் நேரடியாக கலப்பதால் குடிநீரும் மாசுபடிந்து வருவதால் சுத்திகரிப்பு செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 85 சதவீத உள்ளாட்சி அமைப்புகள் காவிரி ஆற்றினை நம்பித்தான் உள்ளது.

தண்ணீர் தேவை அதிகரிப்பு

குறிப்பாக ஈரோடு மாநகராட்சி, பவானி நகராட்சி மற்றும் திருப்பூர் கூட்டுகுடிநீர் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வாரிய கூட்டு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவைகள் காவிரி ஆற்றை நம்பி உள்ளன. மாவட்டத்தில் கடும் வெயில் நீடித்து வருவதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றில் தற்போது 1,500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரின் அளவை அதிகரித்து குறைந்தபட்சம் 2 ஆயிரம் கனஅடியாக உயர்த்தினால் ஓரளவு சமாளிக்க முடியும் என்று உள்ளாட்சி அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறும்போது, 'ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரி ஆற்றை நம்பி உள்ளன. கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வருவதால் தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. காவிரியில் தற்போது வரும் தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக 500 கனஅடி உயர்த்தி நாளொன்றுக்கு 2 ஆயிரம் கனஅடி திறந்துவிட்டால் ஓரளவு சமாளிக்க முடியும். ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எனவே அதுவரை கூடுதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Related Tags :
Next Story