வைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு
உளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியம் வைப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் காலிகுடங்களுடன் விவசாய நிலங்களை தேடி வெகுதூரம் செல்லும் நிலை உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் வயதானவர்கள், பெண்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story