குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
x

வங்காரமாவடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

வங்காரமாவடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கீழ்வேளூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

ஒன்றியக்குழு கூட்டம்

கீழ்வேளூர் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை தலைவர் புருஷோத்தமதாஸ், ஒன்றிய ஆணையர் ராஜகோபால், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

புருஷோத்தமதாஸ் (துணைத்தலைவர்) :- ஆந்தகுடி தெற்கு தெரு மண்சாலை-காக்கழனி அங்காடி செல்லும் மண் சாலை, மணலூர் தெற்கு தெரு செல்லும் மண் சாலைகளை தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

தேன்மொழி (அ.தி.மு.க.) :- அகரகடம்பனூர் ஊராட்சி ஆலக்கரை ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.அதற்கு சொந்த கட்டிடம் கட்டி தர வேண்டும். திருவாசல்படி சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. அந்த சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்.

கருணாநிதி (தி‌.மு.க.):-வடகரை ஊராட்சியில் உள்ள மயான சாலை சேதமடைந்து உள்ளது.அதை சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும். வங்காரமாவடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வடகரை ஊராட்சியில் அரசு நேரடி நெல் முதல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

வாசுகி (தி‌.மு.க.):- 75 அனக்குடி ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தீர்மானம்

கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்ததற்கும், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து, அதை திறம்பட செயல்படுத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மேலாளர் முத்துக்குமரன், ஒன்றிய பொறியாளர்கள் ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story