நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் நீர் கசிவு; வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் செல்வதால் விவசாயிகள் அச்சம்

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் நீர் கசிவு; வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் செல்வதால் விவசாயிகள் அச்சம்
x

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் செல்வதால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஈரோடு

நம்பியூர்

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் செல்வதால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கீழ்பவானி வாய்க்கால்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பாசன வாய்க்காலாக இருப்பது கீழ்பவானி வாய்க்கால். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும். இந்தநிலையில் வாய்க்காலில் பல இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதால், இந்த ஆண்டு வழக்கம்போல் தண்ணீர் திறக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் வழக்கம்போல் இந்த ஆண்டு 15-ந் ேததி தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்க்கசிவு

தற்போது கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நம்பியூர் அருகே உள்ள ஆண்டவர் மலை பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் வலதுகரை பகுதியில் ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அச்சம்

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி நீர்க்கசிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

கீழ்பவானி வாய்க்காலில் தற்போது வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் செல்வதால் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு விடுமோ? என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story