பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தல்


பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க  வலியுறுத்தல்
x

சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வலியுறுத்தல்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவைக்கும் தாமிரபரணி ஆதாரமாக விளங்கி வருகிறது. பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆறு மூலம் வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன் ஆகிய கால்வாய்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 1-ந்தேதி கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் அம்பை, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, நெல்லை தாலுகாக்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 10 ஆண்டுகளாக கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கார் சாகுபடிக்கு ஜூன் மாதம் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில், நெல்லை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து வருகிற 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story