மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்


மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்
x

மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அளித்த மனுவில், 'பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். 200 குடும்பத்தினரை தவிர மற்றவர்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கவில்லை. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் குடிநீர் வசதி செய்யப்படாமல் உள்ளது. கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்கும், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் இந்த பகுதியில் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.



Next Story