இடிந்து விழும் அபாயத்தில் குடிநீர் தொட்டி


இடிந்து விழும் அபாயத்தில் குடிநீர் தொட்டி
x

கொடைரோடு அருகே இடிந்து விழும் அபாயத்தில் குடிநீர் தொட்டி உள்ளது.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே குல்லலக்குண்டு ஊராட்சி விநாயகநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கிற மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

குறிப்பாக சிமெண்டு பூச்சு பெயர்ந்து போய் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் குடிநீர் தொட்டியை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த தொட்டியை அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குல்லலக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் பல முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல் பல மாதங்களாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் தண்ணீர் வினியோகம் செய்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. எனவே குல்லலக்குண்டு ஊராட்சி விநாயகநகரில், புதிதாக குடிநீர் தொட்டி கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story