குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்


குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 19 Aug 2023 7:15 PM GMT (Updated: 19 Aug 2023 7:15 PM GMT)

வாய்மேட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

நாகப்பட்டினம்

வாய்மேட்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் கொண்டு செல்வதற்காக வாய்மேடு கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதில் வாய்மேடு கடைத்தெருவில் அமைந்துள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த குழாய் துளசியாப்பட்டினம் நீரேற்று நிலையத்தில் இருந்து அண்ணாபேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக வேதாரண்யம் வரை குடிநீரை கொண்டு செல்கிறது. இந்த நிலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக செல்கிறது.

மீண்டும் உடைப்பு

குழாய் வழியாக பீறிட்டு வெளியேறும் குடிநீர் அந்த வழியாக சாலையில் செல்வோர் மீது படுகிறது. இதே குழாயில் இதே இடத்தில் பலமுறை உடைப்பு ஏற்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுகிய காலத்திலேயே மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த பகுதியில் இவ்வாறு வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story