குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்


குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே ராதாநல்லூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே உள்ள திருச்சிற்றம்பலம் ஊராட்சி குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீர் கிணறு உள்ளது. இங்கிருந்து மோட்டார்கள் மூலம் எடுக்கப்படும் குடிநீர் கடலங்குடி, ராதாநல்லூர், மணல்மேடு, நடுத்திட்டு, திருவாளப்புத்தூர், பட்டவர்த்தி, திருப்பங்கூர், வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய பகுதிகள் வழியே அமைக்கப்பட்டுள்ள குழாய்பாதைகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு செம்பனார்கோவில், தரங்கம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராம பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில் மணல்மேடு அருகே ராதாநல்லூர் மெயின்ரோடு பகுதியில் கடந்த ஒருமாதமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக அருகே உள்ள வாய்க்காலில் கலந்து வருகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story