திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர்

குடிமங்கலம்

குறிஞ்சேரி அருகே திருமூர்த்தி கூட்டு குடிநீர்திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம்

குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வருகிறது. இத்திட்டம் புவியீர்ப்பு விசையை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் பொட்டையம்பாளையம், இலுப்பநகரம், புக்குளம் சிக்கனூத்துஉள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நீருந்துநிலையங்கள் மூலம் குடி தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை

இந்த நிலையில் உடுமலை குடிமங்கலம் ரோட்டில் குறிஞ்சேரி அருகேகடந்த சில தினங்களாக திருமூர்த்தி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் தேங்கி கிடப்பதால் கழிவு நீர் கலக்கும் அபாயம் உள்ளது. திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது இருந்த மக்கள் தொகையைவிட இப்பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து விட்ட நிலையில் கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இல்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னேரி, கோட்டமங்கலம், ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமங்களில் குடி தண்ணீர் வினியோகம் சீராக நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story