நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கபேச்சிப்பாறை அணையில் இருந்து ஒரு மாதம் தண்ணீர் திறக்கப்படும்


நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கபேச்சிப்பாறை அணையில் இருந்து ஒரு மாதம் தண்ணீர் திறக்கப்படும்
x

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கபேச்சிப்பாறை அணையில் இருந்து ஒரு மாதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நேற்று மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெருவிளை, ஒத்தப்பனை தட்டு தெரு, கோட்டவிளை, காமராஜர் படிப்பகம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு நீரோடையில் குப்பைகள் தேங்கி உள்ளதா? என ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து மேயர் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் முக்கடல் அணையில் இருந்து வினியோகிக்கப்படுகிறது. தற்போது அணை நீர்மட்டம் 1.5 அடியாக உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வருகிற 25-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை தண்ணீர் விடப்படும். இதற்காக தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு பணிகள் முடிடைந்துள்ளன. தமிழகத்தில் முன்மாதிரியாக நாகர்கோவில் மாநகா் திகழும். பழுதான ஆழ்துளை கிணறுகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றார்.

ஆய்வின்போது மாநகர நலஅதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story