குமரி சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்...!


கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று குமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

குமரி,

கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று கன்னியாகுமரி, பத்மநாபபுரம், திற்பரப்பு, மாத்தூர் தொட்டில் பாலம், முட்டம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுபயணிளின் கூட்டம் அலைமோதியது.

திற்பரப்பு அருவியில் மிதமாக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அதுபோல் திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்தனர்.

மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காலை முதல் மாலை வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.


Next Story