பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவில் அலைமோதிய கூட்டம்


பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவில் அலைமோதிய கூட்டம்
x

விடுமுறை நாளில் பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவில் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்

சிறுவர் அறிவியல் பூங்கா

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.41.20 லட்சம் மதிப்பில் சிறுவர் அறிவியல் பூங்கா தோட்டம் அமைக்கப்பட்டு, கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த அறிவியல் பூங்காவில் சிறுவர்-சிறுமிகள் விளையாடும் வகையில் ஊஞ்சல்கள், சறுக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி இயங்கும் வகையில், பல்வேறு அறிவியல் உபகரணங்களும் உள்ளன.

பெரம்பலூர் நகரில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால் சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு தான் மாலை நேரத்தில் பெரம்பலூர் பொதுமக்கள் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம்.

கூட்டம் அலைமோதியது

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இந்த நிலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தற்போது தினமும் பூங்காவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பூங்காவில் கூட்டம் அலைமோதியது.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை விளையாட்டு உபகரணங்களில் விளையாட வைத்து அழகு பார்த்தனர். மேலும் அவர்கள் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சிலர் தங்களது உறவினர்களுடன் வந்து மனம் விட்டு பேசி பொழுதை கழித்து விட்டு சென்றனர்.


Next Story