கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு


கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
x

கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

கரூர்

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வளர்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோல் தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதேபோல் வேலாயுதம்பாளைம், நொய்யல் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் வளர்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story