அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட வழித்தடங்கள் விவரம்


அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட வழித்தடங்கள் விவரம்
x

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவுக்கு அனுமதிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட வழித்தடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழாவுக்கு அனுமதிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட வழித்தடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குருபூஜை விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் வருகிற 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் கீழ்க்கண்ட நெறிமுறைகளை கடைப்பிடித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் விவரமாவது:-

ராமேசுவரம் - பட்டணம்காத்தான்- இ.சி.ஆர்.-பேராவூர் சந்திப்பு - பைபாஸ் ரோடு - அச்சுந்தன்வயல் - சத்திரக்குடி - பரமக்குடி - கமுதக்குடி - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன். தேவிபட்டினம் - கோப்பேரிமடம் - பேராவூர் சந்திப்பு - பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல் - சத்திரக்குடி - பரமக்குடி - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன்.

கடலாடி முதுகுளத்தூர்

கீழக்கரை - பட்டணம்காத்தான் இ.சி.ஆர். - பேராவூர் சந்திப்பு - பைபாஸ் ரோடு- அச்சுந்தன்வயல் -சத்திரக்குடி - பரமக்குடி - கமுதக்குடி - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன். சிக்கல் - சாயல்குடி - கோவிலாங்குளம் - கமுதி - பசும்பொன். கன்னிராஜபுரம் - சாயல்குடி - கோவிலாங்குளம் - கமுதி - பசும்பொன். செவல்பட்டி - சாயல்குடி - கோவிலாங்குளம் - கமுதி - பசும்பொன்.

கடலாடி - முதுகுளத்தூர் - பேரையூர் - கமுதி - பசும்பொன்.காத்தாகுளம் மற்றும் எம்.சாலை-துளுக்கன்குறிச்சி, கடம்பன் குளம், மறவர் தெரு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி - பசும்பொன்.பொசுக்குடி - வெங்கலக்குறிச்சி - வெண்ணீர் வாய்க்கால் - முதுகுளத்தூர் - பேரையூர் - கமுதி - பசும்பொன்.

இளஞ்செம்பூர் - முனியன்கோவில் விலக்கு - முதுகுளத்தூர் - பேரையூர் - கமுதி - பசும்பொன்.காக்கூர் மற்றும் புளியங்குடி - கீழப்பனையடியேந்தல் - வெண்ணீர் வாய்க்கால் - முதுகுளத்தூர் - பேரையூர் - கமுதி - பசும்பொன். மேலத்தூவல் - ஆனைசேரி - அபிராமம் - பசும்பொன்.முஸ்டக்குறிச்சி - கமுதி - பசும்பொன்.

க.விலக்கு, கிளாமரத்துப்பட்டி - கமுதி - பசும்பொன்.மண்டலமாணிக்கம் - கமுதி - பசும்பொன்.பெருநாழி - கோவிலாங்குளம் - கமுதி - பசும்பொன். நயினார்கோவில் - எமனேசுவரம் - பரமக்குடி - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன்.

ஆர்.எஸ்.மங்களம் - சி.கே.மங்களம் - சருகனி - காளையார்கோவில் - சிவகங்கை - மானாமதுரை - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன்.திருப்பாலைக்குடி, தொண்டி மற்றும் எஸ்.பி.பட்டினம் - திருவாடானை - சி.கே.மங்களம் - சருகனி - காளையார்கோவில் - சிவகங்கை - மானாமதுரை - பார்த்திபனூர் - அபிராமம் - பசும்பொன்.

தடைசெய்யப்பட்ட வழித்தடங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட வழித் தடங்கள் விவரமாவது:- விருதுநகர் மாவட்டம் - ஆ.புதூர்- மண்டலமாணிக்கம். முதுகுளத்தூர் - தேரிருவேலி வழி கிழக்குதெரு, தேவர்புரம், காக்கூர் ஆர்ச். கீழத்தூவல் - வெண்ணீர்வாய்க்கால். பார்த்திபனூர் சந்திப்பு - அழகன்பச்சேரி. மேலக்கொடுமலூர் விலக்கு - மேலக் கொடுமலூர். முதுகுளத்தூர் - அபிராமம் வழி நல்லூர், மணிப்புரம், ஆரபத்தி. வெங்காளூர் சந்திப்பு - வெங்காளூர். பரமக்குடி 5 முனை சந்திப்பு - கீழத்தூவல் வழி பொன்னையாபுரம், பாம்பூர். காந்திநகர் - எமனேசுவரம் இளையான்குடி சாலை.

ஆர்.எஸ்.மங்கலம் - தேவிபட்டினம். தொண்டி - தேவிபட்டிணம். இதம்பாடல் - உத்திரகோசமங்கை சந்திப்பு வழி உத்திரகோசமங்கை, நல்லாங்குடி. கீழக்கரை - சிக்கல் வழி புல்லந்தை, ஏர்வாடி, இதம்பாடல் சிக்கல் - இளஞ் செம்பூர் வழி கீரந்தை. கடலாடி - மலட்டாறு சந்திப்பு ராமநாதபுரம் நகர் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா வழித்தடங்கள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story